பிரபல தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு வாழ்வில் இவ்வளவு சோகங்களா?.. இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்தவர் தான் ஜேம்ஸ் வசந்தன். இவர் திருச்சியை சேர்ந்தவர். முதன் முதலில் தொகுப்பாளராக தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தவர். அதன் பின்னர் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 1991ம் ஆண்டு சுகந்தி என்ற பெண்ணை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு, ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். மேலும், ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் திரைப் படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன் 10 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜேம்ஸ் வசந்தன் குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதோடு அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்றும் வியந்து போய் உள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் இவரின் மீது பாலியல் புகார் அளிக்க, அதனால் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார். அதன் பின்னர் மனைவி சுகந்தி, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக புகார் அளித்தார். இப்படி பல சோகங்கள் இவரின் வாழ்க்கையில் அரங்கேறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by James Vasanthan (@james_vasanthan) on