பிரபல தொலைக்காட்சியில் முன்னனி தொகுப்பாளினிகளில் ஒருவராக வருபவர் மணிமேகலை. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர், டான்ஸ் மாஸ்டர் ஹுசைன் என்பவரை நீணட காலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணத்துக்கு மணிமேகலையின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் பெற்றோர்கள் துணை இல்லாமல் மிகவும் வாழ்வில் கஷ்டப்படுவதாக மணிமேகலை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

ஆதில், இப்போது நாங்கள் எங்களது வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல நிலைமைக்கு நாங்கள் இன்னும் செல்லவில்லை எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் அவர்களிடம் நிச்சயம் பேச முயல்வோம். இப்போது நாங்கள் பேசினால் நாங்கள் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. பாசம் இல்லாமல் ஒன்றும் இல்லை, பேசவேண்டும் என்ற ஆசைகூட இருக்கிறது நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பாக பேச முயற்சி செய்வோம் என்று கூறியிருந்தார்.

மேலும், தான் தற்போது மிகவும் சிக்கனமாக இருக்கிறேன். கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு வருவோம் என்று கூறி கண்கலங்கியிருந்தார் மணிமேகலை. இந்நிலையில், தற்போது அனைவரும் ஆச்சர்யபடும் விதமாக மணிமேகலை, ஹுசைன் தம்பதியினர் கேடிஎம் 200 சிசி பைக் ஒன்றை வாங்கியுள்ளனர். இதன் விலை 2 லட்சம் ஆகும்.
மணிமேகலை சொன்னது போல தங்களது பெற்றோர்கள் திரும்பி பார்க்கும் வகையில் தனது வாழ்க்கையை மாற்றிவருகிறார். மணிமேகலை மற்றும் ஹுசைன் விரைவில் தங்களது வாழ்வில் ஒரு நல்ல இடத்தை பிடித்து இவர்களது குடும்பத்தினர் இவர்களை சேர்த்துக் கொள்வார்கள் என்று இவரது நண்பர்களும், நெட்டிசன்களும் வாழ்த்தியுள்ளனர்.
View this post on Instagram
New Arrival ? Delivery of our Brand New KTM RC 200 ? @mehussain_7 #ktmrc200 #ktm