தமிழ் சினிமாவில் அக்காலங்களில் காமெடி நடிகர்கள் என்று சொல்ல சில நபர்கள் தான் இருந்தார்கள். ஆனால காலப்போக்கில் அது லிஸ்ட் போடும் அளவிற்கு வளர்ந்துகொண்டே சென்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு காமெடி நடிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. ஆம் தற்போது பல புது முக காமெடியன்கள் அறிமுகமாகி நல்ல நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் என்று சொல்வதை மறுக்க முடியாது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ்.. சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. திருமண நாள் அன்றே அவர் தலைவர் 168 படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சதிஷ் இந்தியன் 2 படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார் சதிஷ். அவர் ஒல்லியாகியுள்ள புகைப்படத்தை அவரே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் லோ பட்ஜெட் சதிஷ் எனவும் அவரின் உதடு லிப்ஸ்டிக் போட்டார் போல இருப்பதால் ஏன்பா லிப்ஸ்டிக் போடுற எனவும் கலாய்த்து வருகின்றனர்.நடிகர் நடிகைகளின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்வது என்றால் நம் மக்களுக்கு காய் வந்த கலை தான் அதை சொல்ல வேண்டுமா என்ன..??