வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வரும் பெண் நேற்றிரவு காவல் நிலையத்துக்கு வந்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைக்க முயன்றார். இதையடுத்து அவரை மீட்ட பொலிசார் விசாரணை நடத்தியதில் அப்பெண் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் துணை நடிகை என தெரிந்தது. அவர் கூறுகையில், எனக்கு பக்ரூதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து என்னை சீரழித்தார். மேலும் அது தொடர்பான வீடியோவை எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பான பொலிசார் விசாரணையில் பக்ரூதீனுக்கும்
நடிகைக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததும் தெரியவந்துள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
