தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். பல்வேறு புகழுக்குரிய இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றன.

இதில் விஜய பிரபாகரனுக்கு ஏற்கனவே கீர்த்தனா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்னும் திருமணம் நடைபெறாமல் உள்ளது. அவரின் மற்றொரு மகன் சண்முக பாண்டியன் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் சண்முக பாண்டியன் வெளிநாட்டில் படித்த போது அங்கு தனதுடன் ஒன்றாக படித்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தான் காதலித்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த பலரும் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
