காதலனுடன் ரொமான்டிக் மூடில் நெருக்கமாக ஸ்ருதிஹாசன்…. போட்டோவை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர். இவரின் நடிப்பில் தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா 107வது படம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

இவர்  தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஸ்ருதிஹாசன் தற்போது தனது காதலன் சாந்தனுடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.