பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோததே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். கடந்த 15 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர்தான் அதிக ஷோக்களை தொகுத்து வழங்கிய தமிழ் தொகுப்பாளினி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.சிறுவயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகையாகவும் தலைகாட்டி வருகிறார். மேலும் அவ்வப்போது, ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், போட்டோ ஷூட், ஆல்பம் பாடல்கள் உள்ளிடவைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார்.

சமீப காலமாக முன்பை விட டிடி சற்று அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், டிடி தற்போது South Indian Fashion Awardsன் இந்த வருடத்திற்க்கான SIFA 2019 விருது விழாவில் விருது வாங்க வந்திருந்தார்.கண்ணை கவரும் உடையில் வந்திருந்த அவரின் புகைப்படங்கள் இணையாயத்தில் வைரலாகிறது.
