அந்த காலங்களில் நம் மனதில் நின்ற பல நடிகர், நடிகைகள் நடிப்பிற்கு பிறகு தங்களின் வாழ்க்கையை வேறு பாதையில் செல்ல அனுமதிக்கின்றனர். சிலர் சீரியல்களில் நடிக்கிறார்கள். ஒரு சிலர் சொந்தமான தொழில் தொடங்குகிறார்கள். ஒரு சிலர் முற்றிலும் மாறுபட்ட பல விஷயங்களை செய்கிறார்கள் என்பது தான் உண்மை. அப்படி ஒரு மாறுபட்ட விஷயத்தை செய்து வருகிறார் முன்னாள் பிரபல நடிகை ஒருவர்..தென்றலே என்னைத் தொடு, விடிஞ்சா கல்யாணம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ.

சினிமாவில் இருந்த போதே திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். கணவர், மகன்கள் என வாழ்ந்து வரும் இவர் அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களுக்காக அரசு நடித்திவரும் காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறாராம்.

இந்த வேலையை தான் மன நிம்மதியுடன் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது அவரது மூத்த மகனும் சமையலில் தெரிந்த விஷயங்களை செய்து கொடுப்பாராம். நடிப்பிற்கு பிறகு ஒரு சில நடிகர் நடிகைகளின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது என்று தான் கூற வேண்டும்.