அண்ணனை கொலை செய்தது ஏன்? கணவனை இழந்த தங்கையின் அதிரவைக்கும் வாக்குமூலம்

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்நதவர் நீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை இழந்தவர் , இவர் தனியாக வசித்து வந்த காரணத்தால், அவருடன் தங்கையுடன் வசித்து வந்துள்ளார் நீலசாமி,தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.பிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது.

அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.இதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் இருந்துள்ளார்.அமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.

நீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார்.தன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.

அப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.மேற்கூறிய விவரங்களை அமராவதி பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.