‘ஆமா நான் பிச்சை தான் எடுக்கிறேன் ‘ உதவி செய்த அரந்தாங்கி நிஷாவின் பரிதாபநிலை…

தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கே அவர்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர் பெரிய அளவில் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார். இவர் செய்வதை அவதானித்த சிலர் பிச்சை எடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கான தக்க பதிலடியினை தெரிவித்துள்ளார். அவரை வெளியிட்ட வீடியோ பதிவு இதோ