ஆர்யா சாயிஷா திருமணம் முடிந்தது..! பிரபலங்கள் வாழ்த்து!! இதோ புகைப்படங்கள்…

ஆர்யா” தமிழ் சினிமாவின் தீராத விளையாட்டுப் பிள்ளை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எதுவும் அவருக்கு செட் ஆகவில்லை என்றே சொல்ல வேண்டும். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த பின் இருவரும் கிசுகிசுக்கப் பட்டனர். அதனை தொடர்ந்து எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட ஆர்யா. 14 பெண்களின் மூன்று பெண்களை தேர்வு செய்தார். அதில் ஒவ்வொரு பெண்ணின் வீடாக சென்று அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் இடம் பிடித்தார். குறிப்பாக இலங்கை பெண்ணான சுசானா வீட்டிற்கு சென்று அவர்களுடன் நெருங்கி பழகினார்.

அவரை தான் திருமணம் செய்வார் என்று எதிர் பார்த்த போது வேண்டாம் என நிராகரித்தார். இந்த நிலையில் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து நடித்தார்

இதில் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. முதலில் கிசு கிசுவாக இருந்த போதும் பெப்ரவரி 14 தன் காதலை கூறினார் ஆர்யா. பின் பெற்றோரின் விருப்பத்துடன் இன்றைய தினம் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது.அதில் ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய முறைப்படி இன்றும் நாளையும் திருமணம் நடைபெறும்..! இதோ புகைப்படங்கள்..!