இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் மற்றவர்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்தனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர்.ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார்.

அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இதில் மும்தாஜ் மட்டும் சுயநலமாக நடந்துள்ளது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் விஜயலட்சுமிக்கும், மும்தாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

மேலும் இணைபிரியா தோழிகளாக இருந்த ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குள்ளும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் யாஷிகா ஐஸ்வர்யாவை கிளம்பு என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.