இதற்கு அடிமையானதால்தான் குழந்தைகளை கொலை செய்தாரா? சிறைக் கைதிகளிடம் திடுக்கிடும் தகவல்களை கூறிய அபிராமி

சென்னை குன்றத்தூரில் கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.சிறையில் சக கைதிகளுடன் பேசும் போது குழந்தைகளை கொலை செய்ய காரணமாக இருந்த பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.முயூசிகலியால் தான் நானும் சுந்தரமும் பழக்கமானோம் என்று கூறியுள்ளார். அதே போல சுந்தரம் சொல்லித்தான் என் பிள்ளைகளை கொன்றேன் என்றும் அபிராமி கூறியுள்ளார்.சுந்தரம் மீது இருந்த காதல் என் கண்ணை மறைத்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருவதாக கூறப்படுகிறது. கள்ள காதலருக்காக பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்போது புலம்பி என்ன பயன்.

இன்று பலரின் வாழ்க்கையை மாற்றுவதில் சமூகவலைத்தளம் காரணமாக உள்ளது. முயூசிகலிக்கு அடிமையானதால்தான் சுந்தரத்துடன் பழக சந்தரப்பம் கிடைத்துள்ளது. முயூசிகலியும் இந்த சம்பவம் நடக்க காரணமாக அமைந்துள்ளது.ஒரு வாரம் கழித்து வாருங்கள் உண்மையை கூறிகிறேன் என்று அவரை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். இந்த கருத்து அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் என்ன உண்மையை மறைத்து வைத்திருந்தார் எதை கூற போகின்றார் என்றும் அனைவர் மத்தியிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அபிராமி என்ற ஒரு பெண் செய்த இந்த செயல் பல பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.பல ஆண்கள் மனைவி மீது உள்ள நம்பிக்கையில் குடும்பத்தையும், குழந்தையையும் விட்டு செல்லுகின்றனர். ஆனால் அபிராமி செய்த செயலினால் பல ஆண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தரம் என்ற தனி நபரை பிரியாணி கடையில் சந்தித்ததன் மூலம் நட்பு மலர்ந்து காதலானதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, முயூசிகலியால் தான் சுத்தரத்துடன் நட்பு வந்தது என்ற கருத்து வெளியாகியுள்ளது.

இதில் எது உண்மை என்பது ஒரு புறம் இருக்க இனி குடும்ப பெண்கள் எப்படி சுதந்திரமாக இருப்பது என்ற ஒரு கேள்வி எழுந்தது. புதுமை பெண்ணாக மாறுவது தவறு இல்லை, அவரின் புதுமையும் மாறுதலும் நல்ல விதமாக இருக்க வேண்டும்.

இப்படி ஒரு குடும்பத்தை சிதைக்கும் அளவு சுதந்திரத்தை தவராக பயண்படுத்தி இருக்க கூடாது. 17 வருடமாக உண்மையாக காதலித்த அபிராமியின் கணவரின் நிலை என்ன? உண்மைக்கும் நம்பிக்கைக்கும் அபிராமி கொடுத்த பரிசு சரியானதா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனைதான் அபிராமிக்கு விதிக்கப்பட வேண்டும் என்று பெண்களே வழியுறுத்தி வருகின்றனர்.ஆனால், இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்புகள் உள்ளன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மரண தண்டனை குறைவுதான். எனவே, அபிராமிக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.