இந்த நடிகையை திருமணம் செய்ய தான் நடிகர் விஷ்ணு தன் மனைவியை விவாகரத்து செய்தாரா?

விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார், பலருக்கும் இவர் விவாகரத்து அதிர்ச்சியை தான் கொடுத்தது. இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஒரு செய்தி பரவியது. இதை முற்றிலுமாக விஷ்ணு மறுத்துள்ளார், விவாகரத்து ஆன நேரம் இந்த படம் வந்ததால், எல்லோரும் இப்படி பேச தொடங்கிவிட்டனர். நட்பு என்பதை தவிர அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என விஷ்ணு கூறிவிட்டார்.

நடிகை அமலா பாலும் ஏற்கனவே இயக்குனர் A. L.விஜயை திருமணம் செய்து திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.