இந்த வார அதிஷ்ட ராசிக்காரர் யார்! நவம்பர் 5 முதல் 11 வரை..

ரிஷபம்!
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்திருந்த காரியம் எதுவாக இருந்தாலும் அது இந்த வாரம் நிறைவேறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக ஏற்படும், மேலும் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கடன் பிரச்சனையில் சிக்காமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செல்வர். மனைவி வழியில் தன லாபம் உண்டு. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாற்றலாகி செல்லகூடும். சிலருக்கு புதிய வாகன வசதிகள் ஏற்படும். உத்தியோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மேஷம்!
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பணத் தேவைகள் அதிகம் இருப்பதால் அதற்காக நிறைய போராட வேண்டிருக்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர். எப்போதும் பொறுமையாகவும், நிதானத்துடனும் செயல்படவும். உங்களிடம் உள்ள சோம்பேறித்தனத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுப விரயங்களால் பணம் நிறைய செலவாகும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கி சுமூக உறவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.

கடகம்!
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல சிறப்பான காரியங்களை செய்ய இந்த வாரம் வழிபிறக்கும். குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேருவர். கணவன் மனைவி உறவுகளில் அன்பு பாசம் அதிகரிக்கும். பண வரவுகள் எதிர்பார்த்த படி நன்றாக இருக்கும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் உண்டாகும். உங்கள் பேச்சு திறமையால் அனைத்தையும் சாதித்து கொள்வீர்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக இருக்கும்.

மிதுனம்!
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல முக்கிய நபர்களின் ஆதரவும் அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். பூர்வ புண்ணிய சொத்துக்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். வாழ்க்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டில் ஒரு சில மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும்.

 

சிம்மம்!
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். விரைவில் உங்கள் வசதி வாய்ப்புகள் கூட ஆரம்பிக்கும். பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் நலனில் அக்கறைகொள்ள வேண்டி இருக்கும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும்.எதிர்பாலினத்தவருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்பார்த்ததை போலவே எல்ல விதத்திலும் நன்மையே உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை காரணமாக வேறு வேலைக்கு மாற வேண்டிவரும். தொழில், வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

கன்னி!
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, அடுத்தவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் தூரத்து பயணங்கள் மேற்கொள்ளவேண்டிவரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்தி கடனை செய்யவும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். அவசரங்களில் எடுக்கும் முடிவுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மையை தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் இருக்கும்.

துலாம்!
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். பண வரவு நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனமாக இருக்கவும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். மனதில் பல புதிய எண்ணங்கள் தோன்றும். கணவன் மனைவி இடையே மனம்விட்டு பேசுவது நன்மைதரும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும்.

விருச்சிகம்!
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வதன் மூலம் எதிர்பாராத நன்மைகளை பெற முடியும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். தடைப்பட்ட பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி சொந்தங்களால் ஆதாயம் ஏற்படும். சுப விரயங்களால் கடன்கள் அதிகரிக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். நீண்ட நாளைய கனவு ஒன்று நனவாகும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு!
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வேண்டியவர்களிடம் முக்கிய விஷயங்களில் அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிலும் பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேன்மை தரும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு கணிசமான வகையில் உயரும். காரிய தடை விலகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் இட மாற்றம் அல்லது பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

மகரம்!
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையில் சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். உடன்பிறப்பு வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் பல சிரமங்கள் இருந்தாலும் லாபம் உண்டு.

கும்பம்!
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மன நிம்மதிக்காக ஆன்மீகக்தில் அதிகம் ஈடுபட விருப்பம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் எந்த தடையுமின்றி வரும். புதிய ஆடை ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். தூரத்து உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் பணம் கைக்கு வரும். பெற்றோர் மற்றும் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய காரணமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். உத்யோகத்தில் கடுமையான முயற்சிக்கு பின் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மீனம்!
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் முழுமனதோடு செய்தால் முழு பலனை நிச்சயம் பலன் உண்டு. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் நிறைய உண்டு. சொத்துக்கள் விற்று புதிய மனைவாங்க கூடும். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.