அகமதாபாத்தைச் சேர்ந்த ஜனம் போர்வால் என்ற 20 வயது இளைஞன்தான் இவ்வாறு புகாரில் சிக்கியுள்ளான். ப்ளஸ் 2 கூட ஒழுங்காக படிக்காமல் பாதியிலேயே நின்றுவிட்ட, இவன், சமூக ஊடகங்களில் பலர் பதிவேற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து, அதனை ஆபாசமானதாக மாற்றுவது வழக்கம். பின்னர், சித்தரிக்கப்பட்ட அந்த ஆபாச புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி, தன்னுடன் வீடியோ சாட் செய்யவும், தொலைபேசியில் பேசவும் கட்டாயப்படுத்துவான். இல்லை எனில், அந்த புகைப்படங்களை ஆபாச தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டுவதும் இவன் வழக்கம். இதனால், இதுவரை 1000க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், 200க்கும் அதிகமானோரின் புகைப்படங்களை, ஆபாச தளங்களில் இவன் பதிவேற்றியுள்ளான். இது மட்டுமின்றி, சுமார் 1500 பெண்களிடம் செல்ஃபோன் எண் வாங்கி, அவர்களை அடிக்கடி வீடியோ சாட் செய்தும், தொலைபேசி மூலமாக ஃபோன் செக்ஸ் செய்தும் தொல்லைப்படுத்தி வந்துள்ளான்.
இதையடுத்து, வகோலா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவனை தற்போது கைது செய்துள்ளனர். இதற்காக, கடந்த 3 மாதங்களாக, போலீசார் விரிவான விசாரணை நடத்தி வந்தன.
சம்பந்தப்பட்ட கொடூரன் அகமதாபாத்தில் இருந்துகொண்டு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த இளம்பெண்களின் புகைப்படங்களை இவ்வாறு மார்ஃபிங் செய்து, ஆபாச தளங்களில் பதிவேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.