கர்நாடகா மாநிலத்தில் சதீஷ் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கத்தியால் தன் மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.இந்நிலையில், மனைவியை கொலை செய்தது குறித்து காவல் நிலையத்தில் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் எங்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. இதனையடுத்து என் மனைவிக்கும் சுனில் என்ற ஒரு இளைஞனுக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனை கேள்விப்பட்ட உடன் மனைவியை கண்டித்து அறிவுரையும் கூறினேன். ஆனாலும் அவர்களுடனான தொடர்பு நீடித்தது.நான் கேட்டதாக கூறி சிலரிடம் மூன்று லட்சம் பணம் ஏற்பாடு செய்து, அதனை அந்த இளைஞனுக்கு கொடுக்கக் கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். இதனையும் பொறுத்துக்கொண்டு கண்டித்தேன்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் என் மனைவி அந்த இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்தேன். கோவத்தில் இருவரையும் தாக்கினேன் பின்னர் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.
அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் தான் கோவத்தில் ரூபாவின் தலையை சீவிட்டேன். அந்த இளைஞனையும் கொலை செய்ய நினைத்தேன் ஆனால் தப்பிவிட்டான் என்ன கூறி உள்ளார்.