கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி உண்மையான அன்புக்கு ஏங்கியது அவர் பேஸ்புக் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அபிராமி செய்த கொலைகள் தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறதுஏதோ ஒரு விஷயத்தை தொடர்ந்து சிந்தித்துகொண்டே இருந்ததால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி மிருக மனநிலைக்கு வந்து இந்த கொலைகளை அவர் செய்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள்,அபிராமி கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான காதலர் தின பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.
“ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள்”திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது, கடந்த மாதம் ஓய்வு பெற்ற அவர், மனைவியோடு சாவகாசமாக இருக்கிறார்.இத்தனை காலம் வேலை, பணம் என கடுமையாக உழைத்தவர் தற்போது தான் மனைவியுடன் சாவகாசமாக அமர்ந்து பேசுகிறார்.மனைவியிடம் கணவன் கூறுகிறார், உன்கிட்ட மனசு விட்டு பேசி எவ்வளவு காலமாச்சு.உன் கை பூரா வெட்டுக்காயமாக இருக்கே, நகம் வெடிச்சிருக்கே. இதையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே என்கிறார் கணவர்.
அதற்கு மனைவி, நா எதை சொல்ல 35 வருடத்தில் எண்ணெய் தெரிச்சிருக்கலாம், காய்கறி நறுக்கும் போது கத்தி கீரியிருக்கலாம், சூடு பட்டிருக்கலாம்.ஆனால் நீங்கள் என்னை இரவில் மட்டுமே பார்ப்பதால் இதையெல்லாம் கவனிக்கவில்லை. கல்யாணமான புதிதில் உங்கள் மடியில் படுத்தேன், தற்போது மீண்டும் தலை வைத்து படுத்து கொள்ளவா என கேட்டாள்.
அதற்கு கண்ணீரோடு, படுத்து கொள் என மனைவியிடம் கணவர் கூறினார்.இப்படியாக இருக்கிறது அந்த பதிவு. இந்த பதிவை பார்க்கும் போது உண்மையான அன்பிற்கு அவர் ஏங்கி இருக்கலாம் என தெரிகிறது.
ஒருவேளை இந்த பதிவை பார்த்து அபிராமியின் கணவர் அவரிடம் மனம் விட்டு பேசியிருந்தார் என்றால் அவரின் பிரச்சனைகள் தெரிந்திருக்கலாம், அவற்றை தவிர்த்திருக்கலாம் என சமுகவலைதளங்களில் பேசப்படுகிறது.