அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் தனது உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.டெய்லர் (27) மற்றும் அமண்டா (30) என்ற இரு பெண்களும் ஒரே இடத்தில் பணி செய்த நிலையில் நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.அமண்டா மூலம் டெய்லருக்கு அவரின் தந்தையான கெர்ன் லெய்மன் (54) உடன் நட்பு ஏற்பட்டது.ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.தன்னை விட 27 வயது அதிகமான தந்தை வயது நபரை டெய்லர் காதலித்ததால் இதற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முக்கியமாக தனது தந்தை லெய்மனுடனான, டெய்லரின் பழக்கத்தை அறிந்த அமண்டா அதிர்ச்சியடைந்தார்.ஆனால் பின்னர் எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி லெய்மனும், டெய்லரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அமண்டா, டெய்லர், லெய்மன் மூவரும் மகிழ்ச்சியாக ஒற்றுமையோடு வாழ்கிறார்கள்.இது குறித்து டெய்லர் கூறுகையில், முதல் முறை லெய்மனை பார்க்கும் போதே அவர் அழகாக இருப்பதாக நினைத்தேன்.
எங்கள் வயது வித்தியாசம் குறித்து கவலையில்லை, எங்களை பார்க்கும் பலர் தந்தை – மகள் என நினைத்து விடுகிறார்கள்.என் மீது லெய்மன் மிகுந்த பாசத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார். என் உயிர் தோழி அமண்டா எங்களை ஏற்று கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
லெய்மன் கூறுகையில், டெய்லர் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். அவள் மிகவும் நேர்மையானவள்.எனக்கு அவர் மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழியாகவும் உள்ளார் என கூறியுள்ளார்.