எனது அம்மா குடிப்பார்…ரஜினிக்கு அனைத்தும் தெரியும்: குடும்ப ரகசியங்கள் குறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறதுவனிதா தனது முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்தபோது ஆரம்பித்த பிரச்சனை இன்றும் வீட்டு பிரச்சனையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள வனிதா தனது குடும்ப ரகசியங்களை தெரிவித்துள்ளார்.மற்ற மகள்களை நன்றாக பார்க்கும் எனது தந்தை, என்னை மட்டும் ஏன் இப்படி நடத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. பிஜேபி கட்சியில் இருக்கும் எனது தந்தை பொலிசாரை பயன்படுத்தி என்னை இவ்வாறு செய்துள்ளார்.

 

எம்ஜிஆர் இருந்தபோது எனது அப்பா அதிமுக கட்சியில் இருந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.எங்க அப்பா தலைமறைவாக இருந்தபோது எம்ஜிஆர் அவரை தேடியுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்புக்கு வந்தபின்னர் கட்சியில் இணைந்தார். பின்னர் மீண்டும் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.தற்போது, பிஜேபி கட்சியில் இணைந்துள்ளார்.

எனது அண்ணன் அருண் விஜய் பிற ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்ததாக டுவிட்டரில் போடுகிறார், ஆனால் சொந்த தங்கை நான் கஷ்டப்படுவது அவருக்கு தெரியவில்லை. இயக்குநர் ஹரிக்கும், எனது தங்கை ப்ரீத்தாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பல உதவிகளை செய்து வைத்துள்ளேன்.இவர்கள் இருவரது வயது வித்தியாசங்களை மறைத்துள்ளேன்.ஆனால், அவர் இப்போது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. மேலும் எனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் முதல் சொத்துக்கள் வரை அனைத்து விவரங்களும் ரஜினி அங்கிளுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

கபாலி படப்பிடிப்பின்போது ரஜினி அங்கிளை மலேசியாவில் சந்தித்து, அனைத்தையும் கூறி அழுதேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினார். எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். எனது அம்மா அதிகமாக குடிப்பார். இதனை எனது குடும்பம் பயன்படுத்திக்கொண்டது. எனது அம்மா இப்படி இருந்தால் தானே சொத்துக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

இதனால் எனது அம்மாவின் குடியை யாரும் நிறுத்த முன்வரவில்லை. மேலும், நான் மூன்று முறை திருமணம் செய்துகொண்டதாக கூறுகிறார்கள். ஒருவரை திருமணம் செய்து வாழ்பவர்கள் என்ன ஒழுக்கமாக வாழ்கிறார்களா என்ன?எனது பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன். அவர் சம்மதம் தெரிவித்தால் அவரிடம் எனது பிரச்சனைகளை கூறுவேன். அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.