கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்கி அனைவரையும் வாய் பிழக்க வைத்த நடிகர் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி..! அதுவும் எத்தனை லட்சம் தெரியுமா?

‘கஜா’ புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு, உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளால் அம்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுள்ள பெரிய துயரமே மக்கள் வீடுகளும் கூட இல்லாமல் அவதிப்படுவது தான்.  புயல் வந்து முடிந்து 2 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் அங்கு மின்சாரம் கூட வரவில்லை இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்போது தான் மெல்ல மெல்ல அவர்களின் உண்மையான கஷ்டத்தை புரிந்து பொருட்கள் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர.

இதைப்பொருட்டு பல தலைவர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தார் கஜா புயல் நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளருமான ராஜசேகர பாண்டியன் ட்வீட் செய்துள்ளார். அதை நடிகர் சூர்யா சிவகுமார் ரீடிவீட் செய்துள்ளார்.

அதன்படி, நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா சார்பாகவும், 2 டி என்டர்டெய்ன்மென்ட் சார்பாகவும் கஜா புயல் நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் நன்கொடையை அரசு சாரா அமைப்புக்களின் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மக்களுக்காக பிரார்த்திப்போம், கைகோர்ப்போம் உள்ளிட்ட ஹேஸ் டேக்குகளுடன் அந்த டிவிட்டர் பதிவு இடம்பெற்றுள்ளது.இப்போது விஜய் சேதுபதி அவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளாராம்.