கணவன் மீது சந்தேகம் : பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றிய மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.கேரளாவின் குளத்தூர் பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான ரஞ்சு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தமது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த ரஞ்சு, குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் தமது கணவரின் புகைப்படங்களையும் இணைத்து ஆபாச புகைப்படங்களை உருவாக்கி அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் தொடர்புடைய பெண் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு கேரள சைபர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் சமூக வலைதளத்தில் ஆபாச படங்களை பதிவேற்றிய குற்றத்திற்காக ரஞ்சுவை கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி ஆபாச புகைப்படங்களை உருவாக்க ரஞ்சுவுக்கு உதவிய இளைஞரையும் பொலிசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.