கருணாநிதி மறைவுக்கு குழந்தையை போல் கண்ணீர் விட்டு கதறிய நடிகர் விஜயகாந்த்..!!! கண்கலங்க வைக்கும் வீடியோ பதிவு

`அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணம் எல்லாம் கலைஞரிடம் தான் இருக்கிறது” – கருணாநிதி மறைவுக்கு அழுதுகொண்டே பேசும் கேப்டன் விஜயகாந்த்தமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் தி,மு,க-வின் தலைவராக இருந்தவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு, தமிழகத்துக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். செய்தியாளர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார் முதல்வர் பழனிசாமிஅஞ்சலி செலுத்திய முதல்வர் துணை முதல்வர்

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் எம்.பி தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ஒப்பற்ற தலைவர். அவர்களின் சாதனைகள் இனியும் யாரும் செய்ய முடியாது. அரசியல், கலை, இலக்கியம் எல்லம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்” என்றார்,

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதிக்கு ரஜினிகாந்த் மலர் அஞ்சலி:

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவர் மனைவி லதா , மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.கருணாநிதிக்கு ராணுவ மரியாதை

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்மீது முப்படை வீரர்கள் தேசியக்கொடியைப் போர்த்தி சல்யூட் அடித்து ராணுவ மரியாதை செலுத்தினர்.டி.டி.வி.தினகரன் வருகை:

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகைதந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஆதரவாளர்கள் உடனிருந்தனர். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழையில் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அருகில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், சி.ஐ.டி காலனியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸின் முன்னே, ‘வேண்டும்… வேண்டும்… மெரினா வேண்டும்’ என்று தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், அவரது உடல் சி.ஐ.டி காலனியிலிருந்து தொண்டர்கள் முழக்கத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸுக்கு முன்னே மு.க.ஸ்டாலின் காரில் சென்றார்.

ஆம்புலன்ஸுக்கு முன் சிறிது தூரத்தில் தி.மு.க தொண்டர்கள் ‘வேண்டும்… வேண்டும்.. மெரினா வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பியபடியே தொண்டர்கள் நடந்து சென்றனர்.ராஜாஜி அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் அமர்ந்துள்ளனர். காவல் துறையினர், பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வைரலாகி வரும் விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதிவு இதோ