கவிஞர் வைரமுத்துவின் மனைவி பொன்மணி எங்கே?

பாடகி சின்மயி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வைரமுத்து தொடர்பில் அவரது ரசிகர்கள் இன்னொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.பொதுவாக பெரும்பாலான திரைப்பிரபலங்கள் தாங்கள் தொடர்பான விழாக்களில் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம்.இது தமிழகத்தில் நடைபெறும் விழாக்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் கூட கலைநிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரை நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்துடனே செல்கின்றனர்.மறைந்த வாலிபக் கவிஞர் வாலி தாம் கலந்து கொள்ளும் முக்கிய விழாக்களில் எல்லாம் தமது மனைவியை அழைத்து வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

அதேப்போன்று மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார், தாம் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் தமது மனைவியையும் அழைத்து சென்றுள்ளார்.இயக்குனரும் நடிகருமான சந்திரசேகர் மட்டுமல்ல, அவரது மகன் நடிகர் விஜய் கூட தாம் தொடர்பான விழாக்கள் அனைத்திலும் குடும்பத்துடனே கலந்து கொண்டுள்ளனர்.நடிகை குஷ்பு இதுவரை வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்ற அனைத்திலும் தமது மகள்களை அழைத்து சென்றுள்ளது, அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களே சாட்சி.ஆனால், 7 முறை தேசிய விருது பெற்றவரும் புத்தகங்கள் பல எழுதியுள்ளவருமான பாடலாசிரியர் வைரமுத்து இதுவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் தமது மனைவியை அழைத்துச் சென்றதில்லை என்ற ஆதங்கத்தை அவரது ரசிகர்கள் தற்போது முன்வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளில் வைரமுத்து கலந்துகொண்டுள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் வைரமுத்து தனியாகவே அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனே சென்று வந்துள்ளார்.ஆனால், வைரமுத்துவின் மகனும் வளர்ந்துவரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி தாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தமது மனைவியை அழைத்து சென்றுள்ளது புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

வைரமுத்து தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அவரது மனைவி எங்கே என்ற கேள்வி வைரமுத்துவின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், வைரமுத்துவுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பொன்மணி பிரிந்து வாழ்வதாகவும், தமது கணவர் தொடர்பில் அவருக்கு ஏற்கெனவே அனைத்தும் தெரியும் என்றும் சில உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.