காட்டுக்குள் மாணவிக்கு அரங்கேறிய கொடூரம்: இளைஞர்களின் வெறிச்செயல்..!! கண்ணீருடன் தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார் லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த மலைக்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை – மலர் தம்பதியினரின் மகள் சவுமியா, கடந்த 2ம் தேதியன்று சதீஸ், ரமேஷ் என்ற இரண்டு கொடூரன்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு அனாதையாக ஆற்றங்கரையோரம் தனித்து விடப்பட்டு கிடந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுமியா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வரும் பொலிஸாரும், பெரிதளவில் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சவுமியாவின் தந்தை அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், மகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதும், வழக்கு பதிவு செய்ய கோட்டபட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதனை அலட்சியமாக கருதிய பொலிஸார், வழக்கு பதிய 6 ஆயிரம் லஞ்சமும், 500க்கு டீசல் போடுமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்களாக போராட்டம் நடந்ததி வரும் பொதுமக்கள் மத்தியில் இந்த தகவல் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.