வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர் செய்த ஒரு கொலையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி ஸ்ரீஜா என்ற இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது. செவிலியராக பணியாற்றி வந்த இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீஜா-வின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை வைத்து விசாரணை நடத்தி மங்காடு பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்ற வேன் ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விபின், தனது வேனில் பணிக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளையும் ஏற்றிச் செல்வது வழக்கம். பெண்களை கவர்வதற்காக வேனில் காதல் பாடல்களை ஒலிபரப்பும் விபின், அதில் வரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை நினைத்துத் தான் காதல் பாடலை ஒலிபரப்பியதாகப் பேசி, பெண்களை மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படித்தான், தன்னை சினிமா நாயகன் போல நினைத்து பல காதல் பாட்டுகளை போட்டு, ஸ்ரீஜாவை காதல் வலையில் மயக்கியுள்ளார்.
அவனது காதலை நம்பி அவன் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்றுவர குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஸ்ரீஜாவை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் கர்ப்பமான ஸ்ரீஜா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், கடந்த 20-ம் தேதி இரவு நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி ஸ்ரீஜாவை பைக்கில் அழைத்து சென்று தாமிரபரணி ஆற்றில் தள்ளிகொலை செய்துள்ளார்.
இதனை விபின் பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். எந்த ஒரு பெண்ணும் புகார் அளிக்காததால் அவன் தப்பி வந்ததும் தெரியவந்தது. விபினை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.