கொடூரமாக கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை: பெண்ணின் வெறிச்செயல்… திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தின் திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன இவர் நிதி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.சம்பவத்தன்று வெங்கடேஷ், ஜெயந்தி (23) என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார்.அப்போது ஜெயந்திக்கும், அவருடைய பக்கத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் ராதா (50) என்பவருக்கும்.இடையே வீட்டில் பொருட்களை வைத்தது தொடர்பாக சண்டை நடைபெற்றது.

அப்போது ராதாவும், 16-வயது சிறுவனும் சேர்ந்து ஜெயந்தியை தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார்.அங்கு பணம் வசூலிக்க சென்ற வெங்கேடஷ், ஜெயந்திக்கு ஆதரவாக பேசி உள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ராதா, தனக்கு துணையாக தனது உறவினர்களான ஜெய்நகர் சிவக்குமார் (30), பாலு (37) ஆகியோரை வரவழைத்துள்ளார்.பின்னர் ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவனும் சேர்ந்து வெங்கடேசை தாக்கி.

அவரை அங்கிருந்த அம்மி கல் மீது தள்ளி உள்ளனர்.இதில் அம்மி கல் மீது, விழுந்த வெங்கடேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தா.

இந்த கொலை தொடர்பாக ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நால்வரையும் பொலிசார் கைது செய்தனர். வெங்கடேஷின் இறப்பு செய்தியை கேட்டு அவர் மனைவி, உறவினர்கள் அழுததால் அந்த பகுதியில் சோகம் நிலவியது.