நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர்களில் சர்கார் டீஸருக்கான கவுன்ட்டவுனை தொடங்கிவிட்டனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான “மெர்சல்” படத்துக்கு பின்பு “சர்கார்” படம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதால், . இந்த சர்கார், முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கும் மூன்றாவது படம் என்பதால் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.