பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மக்கள் இசைக் கலைஞர், நடிகர் அவசாரம் எடுத்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ், மக்கள் இசைக் கலைஞரான நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவரும் அவரது மனைவி ராஜலெட்சுமியும் சேர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களை பாடி வருகின்றனர்.
சமீபத்தில், பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் சார்லி சாப்லின் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளனர். அந்த சின்ன மச்சான் பாடல், பட்டி தொட்டியெங்கும் பரவி வைரலாகியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் செல்வ தங்கையா இயக்கத்தில் உருவாகும் கரிமுகன் என்ற படத்தில் செந்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்திருக்கிறார். இந்நிலையில் அந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.அந்த படத்தின் ட்ரைலர் இதோ