அஜித் நடித்த சிட்டிசன் படம் எவ்வளவு பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றது என்பது உங்களுக்கு நன்றாகவே நினைவிருக்கும். அஜித் பல வேடங்களில் இதில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்த்ரா தாஸ். கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பெங்களூரில் இவர் நேற்று தன்னுடைய காரில் உறவினர் வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றாராம். ராஜாஜி நகர் என்ற இடத்தில் கார் சிக்னலில் நின்றுள்ளது. பின்னால் இருந்த ஒருவர் ஹார்ன் அடித்து தனக்கு வழிவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் வசுந்த்ரா வழிவிடவில்லையாம்.
இந்த கோபத்தில் அந்த நபர் நடிகையின் காரை பின்னாலேயே விரட்டி சென்றுள்ளார். மல்லேஸ்வரம் பகுதியில் அவரை வழிமறித்து தகராறு செய்ததோடு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, கையை பிடித்து இழுத்து அடிக்க முயன்றதோடு சலசலப்பானதால் தப்பி ஓடிவிட்டாராம். உடனே வசுந்த்ரா மல்லேஸ்வரம் போலிசில் புகார் அளித்துள்ளார். போலிசார் அந்த நபரை தேடி வருகிறார்களாம்.