சின்மயிக்கு ட்விட்டரில் பகிரங்க ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்? வாய் திறப்பாரா?

”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட பல திரையுலக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சின்மயிக்கு ஆதரவாக தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு திரையுலகம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.6 வருடங்களுக்கு முன் பிளாக்கர்கள் என்று ஒரு இனம் கொடிகட்டிப் பறந்தபோது அவர்களோடு வம்பிழுத்து பலரை உள்ளே தள்ளிய அனுபவமும் சின்மயிக்கு உள்ளது. அப்படி கைது செய்யப்பட்டவர்களுல் சில பத்திரிகையாளர்களும் அடக்கம்.

இப்போது போலவே, உண்மையா அல்லது கதையா என்று தெரியாமல் சின்மயியை சப்போர்ட் பண்ணியவர்கள் ஏராளம்.இதைத்தான் காலக்கொடுமை என்று சொல்வார்கள்.சப்போர்ட்டர்கள் லிஸ்டில் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் ஒருவர்.தனது மனைவி நந்தினியயை சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு.

2012 மார்ச்சில் சின்மயிக்கு ஆதரவாக அவர் போட்ட ட்விட்டில்…’சின்மயி உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன். சரியான காரியத்தில் இறங்கியிருக்கிறீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என்று ட்விட்டியிருக்கிறார்.

இந்நிலையில் தனது தந்தையை பற்றி வளம் வரும் சின்மயி விவகாரத்திலும் மதன் கார்க்கியிடமிருந்து சின்மயிக்கு ஆதரவான ட்விட் வருமா?என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.