சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்த பெண்: 1.3 மில்லியன் பேர் பார்த்த வீடியோ

அவுஸ்திரேலியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்துள்ளதை இதுவரை 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். Sarah Stevenson என்ற பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சிட்னியை சேர்ந்த இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த வேதனையை பகிர்ந்துகொண்டதன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார். 30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தனது உடலை அமைதிப்படுத்தி குழந்தை பெற்றெடுத்துள்ளார். Sarah அனுபவித்த வலிகள் முதல் அவர் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அனைத்தும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு Sarah வின் காதலர் குர்த், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் உதவியாக இருந்துள்ளனர். Sarah பிரசவ வலியால் துடிக்கும்போது காதலர் குர்த் தனது காதலிக்கு ஆதரவாக இருந்ததை வீடியோவில் பார்வையாளர்களால் பார்க்க முடிந்தது.  30 மணிநேரம் போராடியSarah தனது மனதையும், உடலையும் கையாளுவதற்கு கடுமையாக போராடி இறுதி ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து Sarah கூறியதாவது, அந்த வீடியோவில் ஒரு முறை கூட நான் அழாமல் இருந்தது நம்பமுடியாத தருணமாக உள்ளது.  ஓரு குழந்தையை பெற்றெடுக்க நாம் எவ்வளவு அன்பினை செலவிட வேண்டியிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்து எனக்கு ஆதரவு அளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.தற்போது இணையத்தில் வெளியாகி  வைரலாகும் அந்த விடியோவை Sarahs Day என்ற யூடுப் பக்கத்தில் பாருங்கள்