வளசரவாக்கத்த்தில் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. குறிப்பாக இவர் நடித்த வம்சம் டிவி சீரியலில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தவர்.
சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை பிரியங்கா.இவருக்கு திருமணமாகி விட்டது ஆனால் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார் பிரியங்கா.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
32 வயதான பிரியங்காவுக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தொழில் சார்ந்த பிரச்சனையா என்று தெரியவில்லை
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் திரையுலகமும், சின்னத்திரை உலகமும் கவலை அடைந்துள்ளன.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்