சொந்த மருமகளையே ஆள் வைத்து கொலை செய்த மாமனார்..!! எதற்காக தெரியுமா?

பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது.அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம் சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தன் மகளை தனது மாமனார் ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் துளசிங்கம். நுங்கம்பாக்கம் அழகுநிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவரது மகள் ரம்யா.

நேற்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது மினி வேன் மோதி படுகாயமடைந்தார்.சிகிச்சை பலனின்றி அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தத நிலையில் வேன் ஓட்டுநர் பழனி மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் துளசிங்கம் தனது மாமனாரான திரைப்பட ஸ்டண்ட் கலைஞர் ரத்தினமும், அவரது மகன் எத்திராஜூம் சேர்ந்து தன் மகளை ஆள் வைத்து வாகனத்தை ஏற்றிக் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரில், ரம்யா, தாத்தா வீட்டிலேயே வசித்து வந்த நிலையில்.

அவர்கள் சொத்து விவகாரத்தில் தனது மகளை அங்கிருந்த விரட்ட முயற்சி செய்ததால் தகராறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இதனால் ரம்யா கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாக துளசிங்கம் தெரிவித்துள்ளார்.