தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மருத்துவ பரிசோதனைக்கு வந்த சந்தோஷ்குமாருக்கு தண்டனை கொடுத்த பொதுமக்கள்..!! வைரலாகும் வீடியோ

தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் வீட்டருகே.

தன் பாட்டியுடன் தங்கியிருந்த சந்தோஷ்குமார் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையில் மருத்துவ பரிசோதனைக்காக சந்தோஷ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

பரிசோதனைக்கு பின்னர் வெளியே வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினார்கள். ஒன்றும் அறியாத சிறுமியை கொடூரமாக கொலை செய்த

சந்தோஷ்குமாரை சும்மா விடக்கூடாது என மக்கள் அப்போது கோபமாக தெரிவித்தனர். கைதி சந்தோஷ்குமாரை போலீசார் அழைத்து செல்லும் பொது அவர் தாக்கப்படும் வீடியோ பதிவு இதோ