தமிழ் சினிமாவின் மிக சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் திரு. ரகுவரன் அவர்கள். பல்வேறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் நடிகர் ரகுவரன் தான். பாட்ஷா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு அதன் வில்லன் நடிகர் ரகுவரனும் முக்கிய காரணம் ஆவார். கேரளாவில் பிறந்த இவர் தென்னிந்திய சினிமாக்களில் வில்லனாக நடித்து ஜாம்பவானாக திகழ்ந்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு நோயின் காரணமாக இறந்தவிட்டார்.
இவருக்கும் நடிகை ரோகினிக்கும் கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். 1998ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 20 வயதாகும் அவரின் பெயர் ரிஷிவரன். இவர் சென்னையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது ரிஷிவரன் அவருடைய அம்மா ரோகினியிடம் தான் இருந்து வருகிறார்.