நடிகர் தம்பி ராமைய்யா, தமிழில் வெளியான மைனா படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர். மேலும் கும்கி, சாட்டை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பான பெயரை பெற்றிருப்பவர்.காமெடி நடிகரான தம்பி ராமைய்யா தற்போது மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனது மகன் உமாபதி ராமையாவை தனது ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறாராம் தம்பி ராமையா.இந்த படந்தை மலேசியாவில் உள்ள அவரது தங்கை தான் தயாரிக்கிறாராம்.
இந்த படத்தின் கதை திரைக்கதை, பாடல்கள், இசை , இயக்கம் என்று அனைத்தையும் தம்பி ராமைய்யா தான் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்துள்ள அவரது மகன் மகன் உமாபதி ராமைய்யா சிறு வயது முதலே நடனத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பதால், இவரை எல்லோரும் ஹ்ரித்திக் ரோஷன் என்று தான் கூறுவார்களாம்.
மேலும் இவர் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.மேலும், தம்பி ராமையா இயக்கும் மணியார் குடும்பம் படத்தில்
யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில், இவருக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவிற்குமிடையே காதல் இருக்கிறது என ஒரு வதந்தி கிளம்பியது குறிப்பிடதக்கது.