தூக்கில் தொங்கிய மாணவி- பெற்றோர் கூறிய தகவலால் அதிர்ந்துபோன போலீசார்!

தற்கொலை என்பது கோழைத்தனமான செயல் என்பது அனைவருக்குமே சிறுவயதில் இருந்தே சொல்லித்தான் வளர்க்கப்படுகிறது.ஆனால் சிறு வயதில் முடிவெடுக்க முடியாமல் அந்த வயதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பல சிறு வயது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.உண்மையை சொல்லப்போனால் பல சிறிய காரணங்களுக்காக கூட சில பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.மேலும் இந்த சம்பவத்தின் பின்னணி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இகிஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை இகிஷா மட்டும் வீட்டில் இருந்த நிலையில் குடும்பத்தார் வெளியில் சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது இகிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு குடும்பத்தார் எடுத்து சென்ற நிலையில் இகிஷா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இறப்பதற்கு முன்னர் இகிஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.இகிஷா பெற்றோர் கூறுகையில், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இம்முடிவை அவர் எடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

இதனிடையில், மார்ச் 16-ஆம் திகதி வந்த பள்ளி தெரிவு முடிவுகளில் இரண்டு பாடங்களில் இகிஷா மிக குறைவான மதிப்பெண்கள் பெற்றதும், அதனால் ஆசிரியர்கள் மூலம் அவர் அழுத்தத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிலிருந்தே மன அழுத்தத்துடன் இகிஷா இருந்துள்ளார்.பொலிசார் கூறுகையில், இகிஷா குடும்பத்தார் எழுத்து பூர்வமான புகார் எதுவும் இன்னும் கொடுக்கவில்லை.

அப்படி கொடுத்தவுடன் இதுகுறித்து விசாரிப்போம், தற்போது இகிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அந்த பள்ளி குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.