நடிகை குஷ்புவா இது? மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்? நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவில் நாயகர்கள் கொண்டாடப்பட்ட அளவுக்கு நாயகிகள் கொண்டாடப்படுவது அரிதினும் அரிது.தமிழ் ரசிகர்களால் நடிகர்கள் அளவுக்குக் கொண்டாடப்பட்ட நடிகைகளை விரல்விட்டு எண்ணக்கூடத் தேவையில்லை, அவ்வளவு சொற்பம். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகச்சில நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். பொதுவாக தமிழ் சினிமாக்களில் ஹீரோக்களைப் புகழ்வதுபோலவே பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் ‘அண்ணாமலை’ படத்தில் ‘கொண்டையில் தாழம்பூ..நெஞ்சிலே வாழைப்பூ…கூடையில் என்ன பூ? குஷ்பு!” என்று ஒரு பாடல் அமைக்கப்பட்டது குஷ்புவுக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம்.

பொதுவாக நடிகைகளின் நடையுடை அலங்காரங்கள் ரசிக்கப்படுவதும் அதையொட்டி புதிய ஃபேஷன்கள் உருவாவதும் இயல்புதான். வாணிஶ்ரீ கொண்டை முதல் நதியா தோடு வரை தமிழகத்தில் ஃபேஷன் ஆனது. இவையெல்லாம் சினிமாக்களில் நடிகைகள் பயன்படுத்தியது.ஆனால் சினிமாவுக்குச் சம்பந்தமில்லாத ‘இட்லி’க்குக் குஷ்பு என்று பெயர் சூட்டப்பட்டது குஷ்பு ஒருவருக்குத்தான்.

இந்த அளவு என்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக இருப்பதற்கு அவரின் திறமையும் அழகும் தான் காரணம். அவர் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. அத்துடன் குஷ்புவின் அழகை கண்டு வியந்து போன ரசிகர்கள் அவரின் மகளை கண்டு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.