நடிகை சுவாதிக்கு திருமணம் முடிந்தது- மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ

தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான ‘சுண்ப்ரமணியபுரம் ‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் ‘கனிமொழி, போராளி, வடகறி ‘ போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 31 வயதாகும் ஸ்வாதி மணம்முடித்துள்ளார். திரைப்பட நடிகையாக இருந்து வந்த ஸ்வாதி ரெட்டி , நடிகை இலியானாவிற்கு ஒரு சில படங்களில் டப்பிங்கும் கொடுத்துள்ளார்.

மேலும், ஒரு சில படங்களில் பின்னணி பாடலையும் பாடியுள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுகு, மலையாளம் என்று நடித்து வந்தாலும் நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபாடில்லை.இந்நிலையில் நடிகை ஸ்வாதி, தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கபட்டது.

ஆனால் , அந்த தகவலை ஸ்வாதி மறுத்திருந்தார். அதே போல கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது நடிகை ஸ்வாதி,திருமணம் செய்யபோவதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இவரது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை ஆகஸ்ட் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.வைரலாகும் அவர்களது திருமண புகைப்படம் இதோ