நேற்று தனது வீட்டில் வைத்து துணி துவைத்துக்கொண்டிருந்த Sana Muhammad (35) மீது ஒருவர் வில் அம்பினால் தாக்க, எட்டு மாத கர்ப்பிணியான அவர் இதயத்தில் அம்பு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பிரசவத்திற்கு இன்னும் நான்கு வாரங்களே இருந்த நிலையில், உயிரிழந்த Sanaவின் குழந்தை உடனடியாக அறுவை சிகிச்சை முறையில் வெளியே எடுக்கப்பட்டாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.ஐந்து குழந்தைகளுக்கு தாயான Sanaவைக் கொலை செய்ததாக Ramanodge Unmathallegadoo என்னும் 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் அந்த நபர் Sanaவின் முன்னாள் கணவர் என்பது தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.அவரது புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனையில் வயர்களுக்கு நடுவில் பரிதாபமான நிலையில் இருக்கும் குழந்தையின் படமும் வெளியாகியுள்ளது.