செய்தியாளர் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர்,நடுவிரலைக் காண்பித்து சிரித்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியானது..இதுவும் நேரடி ஒளிபரப்பின்போது நடந்த சம்பவம்.அதைத்தொடர்ந்து வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக
பரவியது.பாகிஸ்தானின் சாமா டிவி ஆசிய கோப்பை போட்டியை பற்றிய செய்தியைக் வசித்து கொண்டுஇருந்த வேளையில், ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வென்றுவிட்டது. இந்த செய்தி ஸ்க்ரோலிங்கில் வந்ததை கொண்டாடும் விதமாக செய்தி வாசிக்கத் தொடங்கும் முன், செய்தியாளர் அதை கண்டு உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்று செய்துள்ளார். இந்த வீடியோவை சையது ராஸா மெஹ்டி என்னும் உடன் இருந்த பத்திரிகையாளர் தன் இணையத்தில் பதிவிட்டு, ’ஜர்னலிஸத்துக்கு இரங்கல்கள்’ என்று விமர்சித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு பலராலும் செய்யப்படும்.நேரடி ஓ;இப்பரப்பின் போது அரகேரிய முதல் சம்பவம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முந்தைய போட்டி ஒன்றின்போது, விளையாட்டு அரங்கத்தில் அமர்த்திருந்த ஒரு சிறுவன் நடுவிரலைக் காட்டி பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய வினோத புகைப்படம் வைரலானது. அதனை நினைவூட்டும் வகையில்தான் இந்த செய்தியாளர் இவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
When panel producer is in so much hurry to switch!!! RIP Journalism ? pic.twitter.com/6NeYRwxNvB
— Syed Raza Mehdi (@SyedRezaMehdi) September 22, 2018