நைட்டியுடன் பத்ரிக்கையாளர்களுடன் வாய் தகாராறில் ஈடுபட்ட பிரபல நடிகரின் மகள்..!!எதற்காக தெரியுமா.?

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட வருடங்களாகவேஇந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவுக்கு சொந்தமான வீடு மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவில் உள்ளது. அதை நடிகர் விஜயகுமார், தன்னுடைய இரண்டாவது மகள் ப்ரித்திக்கும் மூன்றாவது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கும் லீசுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால், மூத்த மகள் நடிகை வனிதாவுக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் அந்த வீட்டில் ஷூட்டிங் நடத்தப்போவதாகக் கூறி நடிகை வனிதா அங்கு வந்துள்ளார். ஆனால், பிறகு, வீட்டைவிட்டு வெளியில் செல்ல அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகுமார் தரப்பில் பரபரப்பான புகார் மனு ஒன்று மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது.அதில், மதுரவாயில் வீட்டை காலி செய்யாமல் இருக்கும் என் மகள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை காலி செய்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.