பரிதாமாக உயிரிழந்த விஜய் ரசிகர்கள்! இந்த வயதில் இப்படி ஒரு மரணம் – குடும்பத்தினர் அழுகை

சர்கார் படம் அண்மையில் வந்த தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். அவருக்கு தமிழ்நாட்டை தாண்டியும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி பலமாக மோதி விபத்து நிகழ்ந்ததில் இருவரும் உயிர்ழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர் ஒப்படைத்தனர். இதனால் இருவரின் குடும்பத்தினரும் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.