பிக்பாஸில் அதிக வாக்கு பெற்று முன்னிலையில் இருப்பவர் இவரே… தற்போதைய நிலவரம் என்ன?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. நேற்று தாடி பாலாஜி எலிமினேட் ஆன நிலையில் இன்று யாசிகா எலிமினேட் ஆனார்.அவர் வெளியே போனபோது பார்வையாளர்கள் அழுததைவிட உள்ளே இருந்த ஐஸ்வர்யா தான் பயங்கர கட்டி பிடித்து அழுதார். மற்ற மூவர்கள் கூட அவ்வளவுவாக ஃபீல் செய்ததாக தெரியவில்லை.அதிலும் போகும் போது ஐஸ்வர்யாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என 3,4 முறை அழுத்தமாக கூறிவிட்டு தான் சென்றுள்ளார், யாசிகா.

இதிலிருந்து ஐஸ்வர்யா மற்ற மூவர்களை பார்த்து பயந்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.அதனால் இந்த கடைசி வாரம் முழுவதும் ஐஸ்வர்யாவுக்கு கஷ்ட காலம் தான். கூட சப்போர்ட்டு கூட ஆள் இல்லாமல் உள்ளார். இதை பார்த்த ஐஸ்வர்யா ஆர்மிகள் சிறிது கலக்கம் அடைந்துள்ளனர்.


இதுவரை நிகழ்ந்த வாக்குப் பதிவில் ரித்விகா முதல் இடத்தில் இருந்து வருகிறார். மற்ற போட்டியாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பது இதோ…

ரித்விகா – 21 லட்சத்து 50 ஆயிரம்
ஐஸ்வர்யா – 11 லட்சத்து 92 ஆயிரம்
விஜி – 6 லட்சத்து 62 ஆயிரம்
ஜனனி – 5 லட்சத்து 07 ஆயிரம்