நடிகைகள் பலர் சினிமாவில் இருந்து விலகி இப்போது பல வேலைகள் செய்து வருகிறார்கள். அப்படி குஷ்புவை எடுத்துக் கொண்டால் சீரியல்கள் நடிப்பதோடு அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். இப்போது தேர்தல் நேரம் தனது கட்சிக்காக பல இடங்கள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் குஷ்பு. அப்படி ஒரு பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய குஷ்பு மீது ஒருவர் தவறாக கை வைத்துள்ளார். இதனால் கோபமான குஷ்பு அவரை கன்னத்தில் அரைந்துள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது