அடமானம் வைத்த வீட்டை இன்னும் மீட்கமுடியவிலை என பிரபல நடிகர் கஞ்சா கருப்புவின் மனைவி சங்கீதா வேதனையுடன் கூறியுள்ளார்.தமிழ்ப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்ட பிறகு பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
இது குறித்து பேசிய அவர் மனைவி சங்கீதா, அந்தப் படத்தை இவருக்குத் தயாரிக்கிற ஐடியால்லாம் இல்லவே இல்லை. நீங்கள் கையெழுத்து போட்டா தான் பணம் கிடைக்கும் என சொல்லி இவரை ஏமாத்திட்டாங்க.கஞ்சா கருப்பு படம் தயாரிக்கிறதால ரொம்ப பிசியா இருப்பாருன்னு அந்த நேரத்துல மத்தவங்களும் இவரை நடிக்கக் கூப்பிடலை.
ஒரு கட்டத்துல குடியிருக்கிற வீட்டை விற்கிற நிலைமைக்கும் வந்துட்டோம். நல்லவேளையாக முதல்ல வீட்டை அடமானம் வைச்சு கடனை அடைக்கலாம்னு முடிவெடுத்து, அடமானம் மட்டும் வைச்சாரு.
ஆனா, அதை இன்னமும் மீட்க முடியவில்லை.முன்பை விட இப்ப நிலைமை பரவாயில்லை, அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.