நடிகர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பிரபல நடிகை ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் வந்த நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் X-வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே சினிமாவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.