பெண்களை பார்த்து காரில் சுய இன்பம் கண்ட நபர்! புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட சின்மயி

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகியான சின்மயி சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். மேலும், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். சின்மயி குற்றச்சாட்டை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு பாதிக்கப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் காரில் பெண்கள் முன்பு சுய இன்பம் கண்ட நபரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சின்மயி. தனது பேருந்தில் நின்றுகொண்டிருந்த பெண்களை பார்த்து அந்த நபர் சுய இன்பம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். சின்மயின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஓடும் பேருந்தில் சுய இன்பம் கண்ட ஒரு பேருந்தில் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சின்மயி பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.