காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயம் இந்த காதல்.இந்த காதல் முதலில் கண்கள் பார்ப்பதில் தான் ஆரம்பமாகிறது.இப்படி பெண்கள் முதல் முறையாக ஆண்களை பார்க்கும் போது, பெண்கள் ஆண்களிடம் எதையெல்லாம் கவனிப்பர்கள் என்பது தெரியுமா? ஆண்களிடம் பெண்கள் முதலில் பார்ப்பது என்ன?ஆண்கள் எந்த சட்டை அணிந்து வந்தாலும், அந்த ஆடையின் நிறம் தனக்கு பிடித்த நிறமா என்பதை தான் முதலில் பெண்கள் பார்ப்பார்கள்.ஆண்களின் ஹேர் ஸ்டைலை பெண்கள் அடிக்கடி கவனிப்பார்கள். அதனால் ஹேர் ஸ்டைல் கலைந்து விட்டால், அதை சரிசெய்வதில் ஆண்கள் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
பெண்கள் ஆண்களிடம் முதலில் அதிகமாக கவனிப்பது, அவர்களின் முன் நீங்கள் எவ்வாறு அமர்ந்து, எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான். எனவே அந்த விடயத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்.ஒரு இடத்தில் இருக்காமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கும் ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புவதில்லை.பெண்கள் ஆண்களை சந்திக்கும் போது, அவர்கள் உங்களிடம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள் என்பதை அடிக்கடி கவனிப்பார்கள்.
எனவே ஆண்கள் நம்பிக்கைக்குரியவராக நடந்துக் கொள்ள வேண்டும்.பெண்கள் ஆண்கள் அணிந்து வரக்கூடிய ஷூக்களை முதலில் கவனிப்பார்கள். எனவே ஷூக்கள் சுத்தமாக மற்றும் பாலிஷாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உண்மையாக உள்ளீர்களா உங்களின் நோக்கம் என்ன? என்பதை எல்லாம் ஆண்களிடம் பெண்கள் அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடுவார்கள்.உங்களை சுற்றி உள்ளவர்கள் அல்லது உங்களின் காதலியின் கேள்விகளுக்கு பதில் கூறுவதை வைத்து, உங்களின் குணத்தை பெண்கள் சரியாக கணித்து விடுவார்கள்.
ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்புவது அவர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வை மட்டுமே.நகைச்சுவை உணர்வு அநேக பெண்கள் எங்களிடத்தில் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ஆகும்.அதனால் உங்களிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை பெண்கள் கவனிப்பார்கள்.பெண்கள் ஆண்களுடைய கைககளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிப்பார்கள். இவை அனைத்தையும் கவனித்து முடித்ததும், இறுதியாக உங்களின் சிரிப்பை கவனிப்பார்கள்.